உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.,29ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !