பழநியில் ஒரே நாளில் 500 திருமணம்: தரிசனத்திற்கு நீண்ட வரிசை!
ADDED :4760 days ago
பழநி: பழநியில் ஒரே நாளில் ஐநூறுக்கும் அதிகமான திருமணங்கள் நடந்தன. வளர்பிறை கடைசி முகூர்த்தம் ஆனதால் நேற்று பழநியில் 500 திருமணங்கள் நடந்தது. பழநியிலுள்ள அனைத்து திருமண மண்டபங்கள், திருஆவினன்குடி கோயில் உள்ளிட்ட இடங்களில் திருமணம் நடந்தது. நகரில் திருமண தம்பதிகளையும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களையும் காண முடிந்தது. ஏராளமான கார், பஸ், வேன், லாரி ÷பான்ற வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. லாட்ஜ்களில் ரூம்கள் நிரம்பின.
காத்திருப்பு: பக்தர்கள் வருகை அதிகமானதால் மலைகோயில் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப்கார், மூன்றாவது வின்ச் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் இரண்டு வின்சுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வின்ச் மூலம் மலைக்கோயில் செல்ல 5 மணி நேரம் காத்திருந்தனர்.