உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற சைவ கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி  சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக சிவ பக்தரான  கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோயிலில்  ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.  தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பக்த கண்ணப்பர் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கண்ணப்பர் உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.  பின்னர், பக்தகண்ணப்ப உற்சவமூர்த்தியை மங்கள வாத்தியங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கோயில் அருகில் உள்ள கண்ணப்பர் மலைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.பின்னர் கண்ணப்பர் கோவில் எதிரில்  உற்சவமூர்த்தியை வைக்கப்பட்டு, கொடியேற்ற பூஜைகள் செய்ய சங்கல்ப பூஜைகள் செய்யப்பட்டது.  அதையடுத்து, கண்ணப்பர் கோவில்  முன்புறம் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாலைகள், தர்பை அணிவித்து தொடர்ந்து கண்ணப்பர் கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது .அதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் கொடிக்கு மந்திரபூஷம் மற்றும் ஆரத்தி எடுத்தனர் . இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர்  நாகேஸ்வரராவ் மற்றும் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !