ஆந்திராவிலிருந்து ஆதியோகி தேர் இழுத்து பாதயாத்திரையாக வந்த சிவனடியார்கள்
ADDED :581 days ago
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆந்திராவிலிருந்து கோவை ஈஷா யோக மையத்திற்கு பாதயாத்திரையாக வந்த சிவனடியார்கள் தரிசனம் செய்தனர். மஹா சிவராத்திரி வரும் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இருந்து 25 சிவனடியார்களும், பெங்களூரில் இருந்து 50 சிவனடியார்களும் ஆதியோகி தேரை இழுத்துக்கொண்டு பாதயாத்திரையாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை கொண்டாட செல்கின்றனர். இதில், நேற்று காலை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆதியோகி தேருடன் பாதயாத்திரையாக ஈஷா யோக மையத்திற்கு புறப்பட்டனர்.