உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெப்பத் திருவிழா ; துர்கா ஸ்டாலின் வழிபாடு

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெப்பத் திருவிழா ; துர்கா ஸ்டாலின் வழிபாடு

மயிலாடுதுறை; சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்திர திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சியாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்  வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவபெருமான் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் கொண்டு இங்கு அகோரமூா்த்தியாக  தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர பெருவிழா, கடந்த  மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன துவங்கியது.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக  12 ஆம் நாள் திருவிழாவான தெப்பத்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு  பிரம்ம வித்யாம்பிகை உடனான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில். எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் தெப்பத் திருவிழாவில் பங்கேற்று தெப்பத்தில் ஒரு முறை சந்திர தீர்த்த குளத்தில் வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்  அதனைத் தொடர்ந்து தீர்த்த குளத்தில் தெப்பம் 5 முறை வலம் வந்தது.இவ்விழாவில் திரளான பக்தர்கள்  கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !