உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபுதாபி இந்து கோயிலில் ஒரே நாளில் 65000 பக்தர்கள் தரிசனம்

அபுதாபி இந்து கோயிலில் ஒரே நாளில் 65000 பக்தர்கள் தரிசனம்

அபுதாபி; அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 65000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் காலை நேரத்தில் 40,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் மாலையில் மேலும் 25,000 பக்தர்களும் தரிசித்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்த போதும், பொறுமையாக வரிசையில் காத்திருந்து, அமைதியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் இந்தியா மற்றும் மெக்சிகோ, லண்டன் என பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !