உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் வருட பூர்த்தி விழா

சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் வருட பூர்த்தி விழா

செஞ்சி; சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் வருட பூர்த்தி விழா நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் 6ம் ஆண்டு வருட பூர்த்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு முனீஸ்வரனுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !