உஜ்ஜைனி மகாகாளி கோவிலில் இந்திய மக்களின் நலன் வேண்டி பிரதமர் மோடி வழிபாடு
ADDED :584 days ago
தெலுங்கானா: செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாதில், 53,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடந்து செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார். அனைத்து இந்திய மக்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகா காளியை வழிபட்ட பிரதமருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சங்கரெட்டிக்கு பிரதமர் செல்கிறார், அங்கு அவர் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.