திருப்போரூர் கோவிலில் சனி பிரதோஷ விழா!
ADDED :4757 days ago
திருப்போரூர்: திருப்போரூர், சவுந்திர நாயகி சமேத விகிதபரமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் ஐயப்பன் கோவிலில் சவுந்திர நாயகி சமேத விகித பரமேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பிரதோஷ விழா விமரிø சயாக நடக்கிறது.நேற்று முன்தினம் வளர்பிறை சனி பிரதோஷம் சிறப்பாக நடந்தது. சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருப்போரூர் கைலாசநாதர் கோவில், தையூர் ö சங்கண்மாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் சனி பிரதோஷ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.