காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் யாதவமேட்டு ராஜக்காபட்டியிலுள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் நிகழ்ச்சியாக அனைத்து தீர்த்தங்களும் முனியப்பசாமி தெப்பத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு யாகசாலையை அடைந்தது.விநாயகர் பூஜை, மகாலட்சுமி ஹோ மம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. இரண்டாம் கால ஹோமம் நடத்தப்பட்டது. அன்று மாலை மூன்றாம் கால ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.நேற்று காலை நான்காம் கால பூர்ணாகுதி திருகடங்கள் புறப்பாடு, விமான கலச குடமுழுக்கு, கற்ப கிரக காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் விசுவநாதன், பாலபாரதி எம். எல்.ஏ., நகராட்சித்தலைவர் மருதராஜ், அ.தி.மு.க., நகர செயலாளர் ராமுத்தேவர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராஜூ, முன்னாள் கவுன்சிலர் மோகன், மணி, மணிமாறன், ராஜேந்திரன், மாரி, ராமலிங்கம், ரவிச்சந்திரன், சுகு, செல்வராஜ் செய்திருந்தனர்.