காளஹஸ்தி சிவன் கோயிலில் யாளி வாகனத்தில் சுவாமி உலா
ADDED :661 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாள் காலை யாளி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும் (ஹம்ச) அன்னபக்ஷி வாகனத்தில் அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன், தங்க வாகனங்களில் ஏற்றப்பட்டு, நான்கு மாட வீதிகள் வழியாக பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.