உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணடியப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கண்ணடியப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், வரதமா நதி அருகே உள்ள கண்ணடியப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பழநி, பாலசமுத்திரம், வரதமாநதி அருகே கண்ணாடிய பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா பிப் 26ல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மார்ச் 6, ல் கணபதி பூஜை உடன் சுதர்சன ஹோமம் துவங்கியது. முதற்கால யாக பூஜை நடைபெற்றது. மார்ச் 7 ல் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதன் பின் விநாயகர், விலங்கடியான், ஆஞ்சநேயர் கருப்புசாமி நாககன்னி கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் காலை 10:35 மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேக சமயத்தில் ஆகாயத்தில் கருடன் உலா வந்தது. கும்பாபிஷேகம் நிறைவாக அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ராமநாதன், பெருமாள் பிள்ளை சன்ஸ், ஆனந்த், பரணி ப்ரூட்ஸ் உரிமையாளர் போஸ்ராஜன், சிவகலை மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !