சென்னை, தி.நகர் திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்
ADDED :683 days ago
சென்னை; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் தாயாருக்கு புஷ்ப யாகம் நடந்தது.
தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் நிர்மானிக்கப்பட்டு கடந்தாண்டு சம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடந்தது. முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தினமும் தாயார் வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலித்து வந்தார். பிரம்மோற்சவ நிறைவை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.