சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் வசதி தொடக்கம்
ADDED :605 days ago
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மலை உச்சியில், 750 அடி உயரத்தில், 1,305 படிகளுடன் கூடிய, லஷ்மி நரசிம்மர் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில், 62வதாகவும், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட, பிரசித்தி பெற்ற தலமாகவும் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மலை கோவில் என்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், படியேறி செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் ரோப்கார் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதையேற்று தமிழக அரசு, 2010ம் ஆண்டு, 9.30 கோடி ரூபாய் மதிப்பில், பணியை தொடங்கியது. பணி முடிந்து ரோப்கார் சேவையை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று தொடங்கி வைத்தார். பக்தர்கள் ரோப்காரில் பயணித்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.