கடையநல்லூர் கோயிலில் நாளை தீர்த்தகுட ஊர்வலம்
ADDED :4749 days ago
கடையநல்லூர்: கடையநல்லூர் கரடிமாட சுவாமி கோயிலில் தீர்த்குட ஊர்வலம் நாளை (30ம் தேதி) நடக்கிறது.கடையநல்லூரில் பிரசித்தி பெற்று விளங்கும் கரடிமாட சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கொடை விழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து மஞ்சன அபிஷேகம், காய்கறி அலங்காரம், அன்னாபிஷேகம் நடந்தது. கொடை விழாவில் சிறப்பு பெற்ற லட்டு அபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (29ம் தேதி) காலை கணபதி ஹோமம், மாலை 3 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 7 மணிக்கு பவுர்ணமி பூஜை, புஷ்பாஞ்சலி நடக்கிறது.கொடை விழாவில் சிறப்பு பெற்ற தீர்த்தகுடம் ஊர்வலம் நாளை (30ம் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. 31ம் தேதி பொங்கல் பானை அழைப்பு, அன்னதானம் நடக்கிறது.