உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் கோயிலில் சிவபார்வதி திருக்கல்யாண விழா

கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் கோயிலில் சிவபார்வதி திருக்கல்யாண விழா

மயிலாடுதுறை; கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் கோயிலில் உமா மகேஸ்வரர் சிவபார்வதி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.
 
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே வெற்றி விநாயகர் கோயில் வளாகத்தில் குபேரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு சிவ பார்வதி உமா மகேஸ்வரர் திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் கொள்ளிடம் அக்ரகார தெருவில் அமைந்துள்ள வேணுகோபால்சாமி கோயிலிலிருந்து சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும்,சிறப்பு யாகமும் நடைபெற்று இரவு 8.30 மணி அளவில் வளர்பிறை திதியை ,உத்திராட்டாதி நட்சத்திரம் சுடிய சுபயோக நேரத்தில் சிவ பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயில் வெங்கடேசதீட்சிதர் தலைமையிலான அந்தணர்கள் திருமண விழாவை நடத்தி வைத்தனர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் சம்மந்தம் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !