உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சுவாமி அம்பாள் மீது சூரிய கதிர்கள்; சூரிய வழிபாட்டில் பக்தர்கள் பரவசம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சுவாமி அம்பாள் மீது சூரிய கதிர்கள்; சூரிய வழிபாட்டில் பக்தர்கள் பரவசம்

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்களாகவும் வைத்தியநாத சுவாமி கோயிலில் சூரிய வழிபாடு நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் 3 நாட்கள் சூரிய வழிபாடு நடக்கிறது.தற்போது கோயில் திருப்பணிகள் நடப்பதால் கொடிமரம் முன்பு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் உற்சவ சுவாமிகள் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7:30 மணிக்கு சூரிய பூஜையின்போது, சுவாமி மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி கதிர்கள் விழுந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !