உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த சிவாலயத்தை சீர்படுத்தும் பணியில் கிராம மக்கள்

சிதிலமடைந்த சிவாலயத்தை சீர்படுத்தும் பணியில் கிராம மக்கள்

உசிலம்பட்டி; உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் அருகே பழமையான கருங்கற்களால் கட்டப்பட்ட சிவாலயம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது. இதனை சீர்படுத்தும் பணியில் கிராம மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். நேற்று கோயில் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்காக பரிகார கணபதி ஹோமம் நடைபெற்றது. திருப்பணிக்குழுவைச் சேர்ந்த ஆதிநாராயணன், ரவிக்குமார், சேதுராமன், இந்து முன்னணி மதுரை மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அரசுபாண்டி, கலாநிதிமாறன், சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன், சதுரகிரி, வெங்கடேஷ் உள்ளிட்டோரும், கிராம மக்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !