விருத்தாசலத்தின் விசேஷம்
ADDED :582 days ago
சிவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் ‘பஞ்சாட்சரம்’. பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை சிவனே ஓதுவதால் காசியை விட புனிதமானதாக விருத்தாசலம் உள்ளது. ‘விருத்தாசலம்’ என்பதற்கு ‘பழமையான மலை’ என பொருள். இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் விசேஷ தொடர்புண்டு.
திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜ கோபுரங்களும், கோயிலுக்குள் ஒன்றுமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்திலும் கொடி ஏற்றப்படுகிறது.
வலதுபுறம் தலை சாய்த்தபடி ஐந்து நந்திகள், மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தங்கள் இங்குள்ளன. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து மகரிஷிகள் பூஜித்து முக்தி பெற்றனர்.