தமிழகத்தில் 48 கோவில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் நாளை துவக்கம்
ADDED :541 days ago
சென்னை; கோடை காலத்தை முன்னிட்டு, பக்தர்களின் நலன் கருதி தமிழகத்தில் 48 முதல்நிலை கோவில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் நாளை (15ம்தேதி) துவங்க உள்ளது.தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து, நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வரும் பக்தர்களின் தாகம் தணிக்க நாளை முதல் 48 முதல்நிலை கோவில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.