திண்டுக்கல் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
ADDED :541 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 102- வது பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான விழா மார்ச் 11ல் கருப்பண்ணசாமி பூஜை நிகழ்வுடன் ஆரம்பித்தது. மறுநாள் புஷ்ப அலங்கார மண்டகப்படி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மார்ச் 20ல் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது.