திருப்பதி ஏழுமலையானுக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 சிசி வாகனம் காணிக்கை
ADDED :542 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு இன்று இருசக்கர வாகனம் காணிக்கையாக வழங்கப்பட்டது.டெல்லியைச் சேர்ந்த ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் மேலாளர்கள் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 சிசி இருசக்கர வாகனத்தை வழங்கினர். ஸ்ரீவாரி கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருசக்கர வாகனத்தின் சாவியை கோவில் துணை இஓ லோகநாதத்திடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருமலை டி.ஐ. சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.