உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி நதியை கடந்து ஜீயபுரம் சென்றார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

காவிரி நதியை கடந்து ஜீயபுரம் சென்றார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பாடு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா 17 ம்தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது, 11 நாட்கள் நடைபெறும் விழாவில் பெருமாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம்
இரண்டாம் திருநாள் இரவு நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பாடு நடைபெற்றது. இன்று அதிகாலை காவிரி நதியை கடந்து ஜீயபுரம் சென்றடைந்தார் நம்பெருமாள். இன்று 19ம் தேதி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 20ம் தேதி தங்க கருடவாகனத்திலும், 21ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் வலம் வருகிறார். சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 22ம் தேதி மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை, 23ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24ம்தேதி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார் நம்பெருமாள்.  தொடர்ந்து, 25ம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்சியான பங்குனி தேரோட்டம் 26ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !