உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் ஏகாதசி சிறப்பு ஆரத்தி; வில்லேந்தி நின்ற ராமரை கண்டு பக்தர்கள் பரவசம்

அயோத்தியில் ஏகாதசி சிறப்பு ஆரத்தி; வில்லேந்தி நின்ற ராமரை கண்டு பக்தர்கள் பரவசம்

அயோத்தி; அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்த தினம் முதல் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசித்து வருகின்றனர். இன்று ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் வழிபட்டனர்.பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி விசேஷமானவை. ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெற முடியும் என்பது நம்பிக்கை. சிறப்பு மிக்க பங்குனி ஏகாதசியான இன்று அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, ஆரத்தி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வில்லேந்தி நின்ற பாலராமரின் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !