காரைக்கால் செல்வ விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது
ADDED :596 days ago
காரைக்கால்; காரைக்காலில் செல்வ விநாயகர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் நிரவி கொம்யூன் ஊழியபத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையும் முதல் கால யாகசாலை பூஜை துவக்கியது.நேற்று யாகசாலை பூஜை முடிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை கோவிலை சுற்றிவந்து அனைத்து விமானங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் கொண்டு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.பின்னர் மகா தீபாராதனை நடந்தது.இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.