கரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 508 விளக்கு பூஜை
                              ADDED :589 days ago 
                            
                          
                          கமுதி: கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 15ம் தேதி காப்பு கட்டியும், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் 508 விளக்கு பூஜை பெண்கள் கூட்டு வழிபாடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்கு முன்பாக முருகனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. மார்ச் 24ல் பால்குடம் ஊர்வலம், திருக்கல்யாணம் மார்ச் 25ல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.