உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் : பக்தர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் : பக்தர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்; தினமலர் செய்தி எதிரொலி ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரதவீதியில் பந்தல் அமைத்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து சென்றனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில. தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போதைய கோடை வெயில் சுட்டெரிப்பதால் கோயிலில் தரிசனத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் நான்கு ரதவீதியில் நிழல்தரும் பந்தல் இன்றி, வெப்ப சலனத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திறந்தவெளியில் ஓடோடி செல்கின்றனர். இதுகுறித்து மார்ச் 14ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று கோயில் நிர்வாகம் கிழக்கு ரதவீதியில் உள்ள நடைபாதையில் பந்தல் அமைத்தும், தெற்கு ரதவீதி நடைபாதையில் நார்மேட் விரித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி ரதவீதியில் மகிழ்ச்சியுடன் சென்றனர்.அனுமதி : மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கோயில் நான்கு வீதி தார் சாலையில் நிழல் தரும் பந்தல் அமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இல்லையெனில் நகராட்சி, கோயில் நிர்வாகம் பந்தல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !