உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை காமாட்சிபுரி ஆதினம் அருளாட்சி ஏற்பு விழா

கோவை காமாட்சிபுரி ஆதினம் அருளாட்சி ஏற்பு விழா

கோவை; கோவை காமாட்சிபுரி ஆதின அருளாட்சி ஏற்பு விழா நடந்தது. கோவை ஒண்டிப்புதுாரில் உள்ள காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சாமிகள், மறைவுக்கு பின், 2ம் ஆதினமாக பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து அருளாட்சி ஏற்பு விழா இன்று நடந்தது. காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் நிருபர்களிடம் பேசுகையில், " சிவலிங்கேஸ்வரர், எந்த வகையான சேவைகளை செய்ய வேண்டும் என்பதை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்துள்ளார். அவரது வழியில் இந்த சமுதாயம் முன்னேற பாடுபடுவோம். மக்களின் துன்பங்களை நீக்க பல சேவைகளை செய்வோம்," என்றார். கோவை கவுமார மடாலயம் குமரகுருபர சாமிகள், பேருர் ஆதினம் சாந்தலிங்க அடிகள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், முன்னாள் நீதிபதி சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !