பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்; 23ல் நடக்கிறது
பெரியகுளம்; பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 23ம் தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டும் விழா: 6ம் நாள் திருவிழா கணக்கு வேலாயி அம்மாள் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு அலங்கரிக்கப்பட்டு மண்டகப்படி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு,அறம் வளர்த்த நாயகி அம்மன் ஞானப்பாலூட்டும் ஐதீகம் நிகழ்வினை அர்ச்சகர் தினேஷ் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர் சிதம்பர சூரியவேலு குடும்பத்தினர் செய்திருந்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.