உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர் ஞானசேகரன், தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 11 உண்டியல்களில் 32 லட்சத்து 69 ஆயிரத்து 315 ரூபாயும், 223 கிராம் தங்கமும், 280 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 75 ஆயிரத்து 560 ரூபாயும் காணிக்கையாக கிடைத்தன. கண்காணிப்பு பணியில் ஆய்வர் முத்துமுருகன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். பூவந்தி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் சந்திரபிரகாஷ் தலைமையில் வங்கி ஊழியர்கள் பணம், காசுகளை சரிபார்த்து பெற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !