பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :647 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி மார்ச் 21ம் தேதி இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு வழிபாடுகள் நடக்கிறது. மார்ச் 29 ல் பால்குட விழாவும், கிடா வெட்டி பொங்கல் வழிபாடும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கண்ணமங்கலப்பட்டி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.