பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :532 days ago
பெரியகுளம்; பெரியகுளத்தில் இன்று பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு நூறுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய 9ம் நாள் திருவிழாவான இன்று (மார்ச் 23) மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவதாலும், லோக்சபா தேர்தல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வரக்கூடும் என்ற நோக்கில் பெரியகுளம் டி.எஸ்.பி., சூரக்குமரன் தலைமையில் நூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.