சென்னை சவுகார்பேட்டையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
ADDED :662 days ago
சென்னை; சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
சென்னையில் வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், புரசைவாக்கம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சவுகார்பேட்டை, தங்கசாலையில் பாதசாரிகள் மீதும் குடியிருப்புகளின் மாடியிலிருந்து, வண்ணநீர் நிரப்பிய பலூன் வீசப்பட்டது. வேப்பேரி, புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும், வடமாநிலத்தவர்கள் குழுவாக சேர்ந்து ஹோலியை, குடியிருப்பு வளாகத்திலேயே கொண்டாடினர். அனைத்து குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து உணவருந்தினர்.