திருக்கச்சி நம்பிகள் கோவிலில் மூன்று கருட சேவை விழா
ADDED :584 days ago
பூந்தமல்லி: பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் கோவிலில், மூன்று கருட சேவை விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பூந்தமல்லியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை, மூன்று கருட சேவை உற்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டு கருட சேவை உற்சவ விழா, நேற்று நடந்தது. ரங்கநாதர், வரதராஜர், சீனிவாசர் ஆகிய மூன்று பெருமாள்கள், தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளி விதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.