பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை
ADDED :663 days ago
கோவை, கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமம், காப்பு கட்டுதளுடன் துவங்கிய விழாவில் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வள்ளி தெய்வானை சமேதராய் அருள் பாலித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு மாலையில் உற்சவ மூர்த்திகளுடன் திருவீதி உலா நடந்தது. அதன் பின் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.