உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்திருப்பதி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் மகாதேசிகன் சுவாமிகள் தரிசனம்

தென்திருப்பதி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் மகாதேசிகன் சுவாமிகள் தரிசனம்

திருநெல்வேலி; மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவராக மகாதேசிகன் சுவாமிகள் தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீவராக மகாதேசிகன் சுவாமிகள் மேலத்திருவேங்கடநாதபுரத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் கோயில் அர்ச்சகர் முரளி பட்டாச்சார், பாலாஜி பட்டாச்சார் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். ஸ்ரீவராக மகாதேசிகன் சுவாமிகள், பெருமாள், தாயாரை தரிசனம் செய்த பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் பாம்பே சீனு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், சென்னை மோகன், சங்கரய்யர், சுத்தமல்லி சுரேஷ், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ஆடிட்டர் ஸ்ரீதர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !