சென்னை, அடையாறு சுந்தர விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
ADDED :721 days ago
சென்னை, அடையாறு, காந்தி நகரில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, இன்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. இதனை தொடந்து, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.