சத்தியமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்
ADDED :636 days ago
செஞ்சி; சத்தியமங்கலம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று பெரிய வியாழன் நிகழ்வு நடந்தது. இன்று சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. பங்கு தந்தை சிரில் அடிகளார் தலைமையில் செஞ்சி – திருவண்ணாமலை சாலை வழியாக சிலுவை சுமந்து இயேசுவின் துயரங்களை ஒவ்வொரு படியாக விளக்கி சிறப்பு பிரார்த்தனையுடன் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதே போல் செஞ்சி புனித மிக்கேல் தேவாலயம் உட்பட செஞ்சி பகுதியில் உள்ள கிருத்துவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.