சிவகிரி ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :595 days ago
ஒட்டன்சத்திரம்; கே.புதூர், சிவகிரி ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளன்று கணபதி ஹோமம் முதலாம் கால யாகபூஜைகள் தொடங்கி நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று ஆதிலிங்கேஸ்வரர், மகாகணபதி கோயில் கலசங்களில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.