கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா துவக்கம்
ADDED :548 days ago
கன்னியாகுமரி; கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொல்லங்கோடு பத்ர காளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திரு விழா நேற்று இன்று மாலை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை பள்ளியுணர்த்தல், கணபதிஹோமம், ஏழு மணிக்கு பிரதான கோயி லில் மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வருதல், மதியம் அன்ன தானம், மாலை தாலப் பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங் காரிமேளம், நாதஸ்வரம், நையாண்டி மேளம், யானை அணி வகுப்புடன் அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.