உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

கோவை; உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு  கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் மூலவர் மற்றும் உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் உற்சவமூர்த்தி கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமயதாரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் மகாலட்சுமி நாராயணன் மற்றும் ஜெய ஹயக்ரீவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !