ஈரோடு: பண்ணாரி கோவிலில் மறு பூஜை விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் மறு பூஜை விழாவில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா மார்ச்,26.,ம் தேதி நடந்தது.1லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழி பட்டனர். அதை தொடர்ந்து இன்று மறு பூஜை நடை பெற்றது. 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் உப்பு,மிளகு,தூவி வழி பட்டனர். இன்னும் பலர் நேர்த்திகடனாக மொட்டை போட்டனர்.மறு பூஜையையொட்டி போக்கு வரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.மறுபூஜையோடு விழா நிறைவு பெற்றது.