திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
ADDED :648 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.
திருவண்ணாமலையில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் அனைத்து சன்னிதிகளுக்கும் சென்ற அவர், பிராகரத்தை வலம் வந்து தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.