உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை., வீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

குலசை., வீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

உடன்குடி; குலசேகரன்பட்டணம் வடக்கூர் வீர மனோகரி அம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்திப்பெற்றது. இக்கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்ச்சியாக நடைபெறும். இந்தஆண்டு திருவிழா நேற்று ஏப். 3ம் தேதி காலை7:30 மணிக்கு கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழாதுவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பால். தயிர் இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி எனபல வகையான பொருட்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து அம்பாள் வீரமனோகரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. சித்திரைதிருவிழா துவங்கியதையொட்டி தினசரி காலை, மாலைசுவாமி தெருவீதி உலா நடக்கிறது. 10ம் திருநாளான வரும் ஏப்.12ம் தேதி மாலை சித்திரைதிருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !