கரிசூழ்ந்த நங்கை அம்மன் கோயிலில் கொடைவிழா கோலாகலம்
ADDED :581 days ago
பத்தமடை; கரிசூழ்ந்தமங்கலம் கரிசூழ்ந்த நங்கை அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கடந்த 31ம் தேதி இரவு மாகாப்பு பூஜையுடன் தொடங்கியது. 1ம் தேதி இரவு குடியழைப்பு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. 2ம் தேதி பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம். மதிய கொடை அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை பொங்கலிடுதல், இரவு பூச்சொறிதல், அபிஷேகம், ஆராதனை, நள்ளிரவு 2 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், அலங்கார தீபாராதனை 3ம் தேதி காலை படையல் பூஜை, மதியம் மஞ்சள் நீராடுதல் நடந்தது. கோயில் அர்ச்சகர் சுப்பிரமணிய சர்மா, சங்கர் கணேஷ் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சுதர்சனன் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தனர்.