உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்மலையில் சன்னாசி படையல்; சுவாமிக்கு 21 வகை அபிஷேகம்

பிரான்மலையில் சன்னாசி படையல்; சுவாமிக்கு 21 வகை அபிஷேகம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி பிரான்மலையில் சன்னாசி சுவாமிக்கு படையல் விழா நடந்தது. கலியுக மெய் அய்யனார் கோயிலில் பங்குனி மாத சன்னாசி படையல் விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி சிலை முன்பாக சமைத்த சாதம் கொட்டப்பட்டு அதில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பிறகு சிவனடியார்களுக்கு பூஜிக்கப்பட்ட அன்னம் பரிமாறப்பட்டு பிடிசாதம் வாங்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !