உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலில் அடிப்படை வசதி; புதிய தங்குமிடம், பாதுகாப்பு அறை செய்து கொடுத்த பக்தர்!

குருவாயூர் கோவிலில் அடிப்படை வசதி; புதிய தங்குமிடம், பாதுகாப்பு அறை செய்து கொடுத்த பக்தர்!

பாலக்காடு; கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் தெற்கு நடையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் பக்தருமான சுந்தர ஐயரும் அவரது குடும்பத்தினரும் புதிய தங்குமிடம், பாதுகாப்பு அறை மற்றும் கழிவறை ஆகியவை பக்தர்களுக்காக அமைத்துக் கொடுத்துள்ளனர். இதனின் சாவியை கடந்த தினம் சுந்தர் ஐயர் தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட்டிடம் வழங்கினர். கோவில் கொடி மரத்தடியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களான மனோஜ், வழக்கறிஞர் மோகன்தாஸ், துணை நிர்வாகி ராதிகா, ராதா, பிரமோத், சுந்தர் ஐயர் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !