பழநி வனதுர்க்கை அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :611 days ago
பழநி; பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு உப கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தெற்குகிரி வீதியில் உள்ள வன துர்க்கை அம்மன் திருக்கோயில், மேற்கு வீதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் நவ கலசங்களை வைத்து கணபதி பூஜையுடன் நடந்தது. கலசத்தில் புனித நீர் நிரப்பி, யாக குண்டமும் வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. அதன் பின் யாகத்தில் வைக்கப்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை அம்மனுக்கு அபிஷேகம், செய்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டு கோயில்களில் வருட அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.