அயோத்தி ராமர் நெற்றில் சூரிய ஒளி; ராம நவமியில் பக்தர்கள் தரிசிக்கலாம்
ADDED :513 days ago
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.சிறப்பு மிக்க ஸ்ரீராமரை வழிபட சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழாவிற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விழாவின் 9ம் நாள் 17 ம்தேதி ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று ராம் லல்லாவின் சூர்யா அபிஷேக மஹோத்ஸவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக அயோத்தி தாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகவான் ராமரின் நெற்றில் சூரிய ஒளிபடும் மங்களகரமான நிகழ்வை காண பக்தர்கள் காத்திருக்கின்றனர்.