உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்

பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், இந்தாண்டுக்கான பிரம்மோத்ஸவ விழா கொடியெற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று,  விச்வக்ஷேனாராதனம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. விழாவையொட்டி, இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, தினமும் மாலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பல்வேறு வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !